/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உள்ளூர் கடைகளிலேயே வாங்க வேண்டும் எச். ராஜா வேண்டுகோள்
/
உள்ளூர் கடைகளிலேயே வாங்க வேண்டும் எச். ராஜா வேண்டுகோள்
உள்ளூர் கடைகளிலேயே வாங்க வேண்டும் எச். ராஜா வேண்டுகோள்
உள்ளூர் கடைகளிலேயே வாங்க வேண்டும் எச். ராஜா வேண்டுகோள்
ADDED : ஆக 29, 2025 05:37 AM

வத்தலக்குண்டு:''அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை தவிர்த்து நமது ஊர் கடைகளில் பொருட்களை வாங்கி சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் ''என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேசினார்.
இந்து முன்னணி சார்பில் வத்தலக்குண்டில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்ததால் வீதி தோறும் விநாயகர் சிலைகள் பெருகி வருகின்றன. தமிழக அரசு விநாயகர் சிலைக்கு தடைகள் விதிக்கிறது. ஆனால் ஹிந்துக்களை இழிவாக பேசிய கருணாநிதிக்கு சிலை வைக்கலாமா.
இந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின் மையக்கருத்து 'நமது தெய்வம் நமது கோயில்'. இதை மனதில் வைத்து ஹிந்து கோயில்களை பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.
நமது கோயில் நமது தெய்வம் என்பதை போல் நமது நாட்டு பொருளாதாரமும் முன்னேற வேண்டும். அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை தவிர்த்து நமது ஊர் கடைகளில் பொருட்களை வாங்கி சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதை அறநிலையத்துறை தொழிலாக நடத்தி வருகிறது.
பா.ஜ ., ஆட்சிக்கு வரும்போது ஹிந்து சமய அறநிலைத்துறை நீக்கப்படும். இவ்வாறு பேசினார்.