ADDED : மே 11, 2025 04:55 AM
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் மண்டகப்படி உரிமை கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயிலின் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 2024 திருவிழாவின் புதிதாக பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி உரிமை வழங்கப்பட்டது. அதன்படி இந்ததாண்டு விழாவில் புதிதாக வழங்கப்பட்ட மண்டகப்படிகள் ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறை தொடரும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது.
அதிர்ச்சி அடைந்த பட்டியலின மக்கள் மீண்டும் மண்டகப்படி உரிமை கோரி கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்து சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டகப்படி உத்தரவு கிடைக்கும் வரை கலைந்து செல்ல போவதில்லை எனவும் தெரிவித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, வத்தலக்குண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.