ADDED : செப் 25, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தொடர்ச்சியாக பணியிடை நீக்கம்,பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து திண்டுக்கல் பழநி ரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் வடிவேல்,பொருளாளர் கருணாநிதி,அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன்,தலைமையிட செயலாளர் சுரேஷ்பாபு,மகளிரணி செயலாளர் நிர்மலா,செய்தி தொடர்பாளர் நாகேந்திரன் பங்கேற்றனர்.