UPDATED : ஜூன் 02, 2026 07:56 PM
ADDED : ஜூன் 02, 2026 07:31 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானலில் ஒரு மணி நேரம் பெய்த சாரல் மழையால் ரம்யமான சூழல் நிலவியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது.
தொடர்ந்து நேற்று மதியம் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தரையிறங்கிய மேகக்கூட்டம், காற்றில் ஈரப்பதம் என ரம்யமான சூழல் நிலவியது. சில வாரங்களுக்கு முன் சுட்டெரிக்கும் வெயில் நீடித்த நிலை மாறி வானம் மேகத்துடன் காணப்பட்டது. இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.
