ADDED : ஜன 24, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வேடசந்தூர் போலீசார் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த டூ வீலர் ஊர்வலம் நடத்தினர். மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
வேடசந்துார் ஆத்துமேடு, பஸ் ஸ்டாண்ட், வடமதுரை ரோடு வழியாக ஆர். டி. ஓ., ஆபிஸ் வரை, ஊர்வலம் சென்றது. எஸ்.ஐ., ஜெயலட்சுமி,எஸ்.எஸ். ஐ., கள் சந்திரன், சிவக்குமார், தலைமை காவலர்கள் ஜீவிதா, தேன்மொழி பங்கேற்றனர்.

