ADDED : ஆக 27, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.28-
திண்டுக்கல் புனித ஜான்பால் பள்ளியில் மாணவர்களுக்கான சைக்கிள், நல உதவி வழங்கும் விழா நடந்தது. பிஷப் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். டி.எம்.எஸ்.எஸ்., அமைப்பு இயக்குனர் ஜான் நெப்போலியன் வரவேற்றார். நிர்வாகி கருணாகரன் திட்ட விளக்கம் குறித்து பேசினார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் காலின் செல்வராணி, போலீஸ் எஸ்.ஐ., சுமதி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் மரிய ஜோசப் நிக்கோலஸ், உதயம் லயன்ஸ் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் தலைவர் வர்கீஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அந்தோணிசாமி வரவேற்றார்.
மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், கல்வி சார்ந்த பொருட்கள், ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
