ADDED : ஜூன் 17, 2026 05:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர்கல்வி சேர்க்கைக்கு வசதியின்றி ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, பரிமளா, கலெக்டரின் தனி உதவியாளர் (கல்வி) சரவணக்குமார், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இரு பெற்றோர் இல்லாத மாணவர்கள், ஒரு பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 75 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் கலை அறிவியல் படிப்புகள், நீட் மறுதேர்வு, இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி.ஐ., தொழில்நுட்ப படிப்புகள், மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
