தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு   அகற்றம்

 திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு   அகற்றம்

 திண்டுக்கல்லில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு   அகற்றம்


ADDED : மே 15, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட தகர ெஷட் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் அகற்றப்பட்டது.

திண்டுக்கல் விவேகானந்த நகரை சேர்ந்த அண்ணாமலையார் மில்ஸ் நிர்வாகி சபரீஸ்சதிந்திரா சொந்தமான 4.5 ஏக்கர் நிலம் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் என்.ஜி.ஓ., காலனி அருகே உள்ளது. பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ள இதன் முகப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறையோரம் ஓட்டல், டெக்கரேட்டர்ஸ், வணிக கடை என ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிடக்கோரி சபரீஸ்சதிந்திரா வழக்கு தொடர்ந்தார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால் மனுதாரர் மீண்டும் முறையிட்டார். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஏப்.30ல் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்ற செல்ல. ஓட்டல் உரிமையாளர் தானாக அகற்றினார். வணிக கடை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. டெக்கரேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் பிரியா ஒரு வாரம் காலஅவகாசம் கேட்டதோடு நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற தடை கோரி மனு செய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஒரு மணி நேரத்தில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி அறிக்கை அளிக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு நேற்று முன்தினம் (மே 13 ) உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் நேற்று (மே 14) மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us