ADDED : அக் 07, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பத்தாவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்கு தலைவர் டெல்லி பாபு தலைமை வகித்தார்.
திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஆதிவாசி மக்கள் உரிமைக்கான தேசிய தலைவர் ஜிஜேந்திர சவுத்ரி, துணைத்தலைவர் பிருந்தா கரத் பங்கேற்றனர். தேசிய தலைவர் கூறுகையில், ஆதிவாசி மக்களின் உரிமைகள் சிதைத்து வருகின்றன. இவர்களுக்கு இன சான்று அளிக்கப்படாமல் உள்ளது கவலைக்குரியது. விரைவில் அவற்றை வழங்க வேண்டும் என்றார்.