/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; 75 பேர் கைது
/
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; 75 பேர் கைது
ADDED : ஜன 08, 2026 06:09 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ஹிந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 75பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுார் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் முத்துக்குமாரசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள முருகன், விநாயகர், அம்மன் கோயில்அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்பும் அக்கோயில் இடிக்கப்பட்டது. இந்நிலையில்அந்த இடத்தை பார்வையிட சென்ற ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டு கைதாகினர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் செந்தில்வேலு, துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனுமதி மீறி ஆர்ப்பாட்டம் செய்த 15பேரை நகர் போலீசார் கைது செய்தனர்.
பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் வேல் ரவுண்டானா அருகே மதுரை கோட்டச் செயலாளர் பாலன், ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் கைது செய்தனர்.

