sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டுகள் முந்தைய அம்மன் சிற்பம் கண்டெடுப்பு வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு

/

 தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டுகள் முந்தைய அம்மன் சிற்பம் கண்டெடுப்பு வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு

 தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டுகள் முந்தைய அம்மன் சிற்பம் கண்டெடுப்பு வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு

 தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டுகள் முந்தைய அம்மன் சிற்பம் கண்டெடுப்பு வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு


ADDED : ஜன 24, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் ஊரை காக்கக்கூடிய 500 ஆண்டு பழமை வாய்ந்த பிடாரியம்மன் சிற்பம் உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு ஆய்வாளர் ந.தி. விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் ,வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி கூறியதாவது:தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் பழமை வாய்ந்த ஊரைக் காக்கும் பிடாரியம்மன் சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் ஒழுங்கற்ற கல்லில் செதுக்கப்பட்டது. தலையில் நெருப்பு சுடர் பறக்கும் அக்கினி கிரீடம், உருட்டு விழிகளுடன் கோபப்பார்வை, கோரை பல், காதுகளில் வட்ட குண்டல், சடச கலையான கரங்கள் ஆறும், இடது கை முன் நீட்டி உள்ளது.

உத்குடியாசனத்தில் வலது கால் பீடத்திலும், இடது கால் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்த நிலையில் இடையில் இடுப்பு பட்டியை சுற்றி விரி தொங்கு மேகலையும், கால்களில் தண்டமும் கொண்டு கோபப்பார்வையுடன் அமர்ந்திருக் கிறாள். போர் வீரர்கள் போருக்கு செல்லும்போது துர்க்கை, தவ்வை, பிடாரி எனும் போர் கடவுள்களை வணங்கி செல்வர்.

இச்சிலை இருக்கும் கிழக்குப் பகுதி ஊர்கள், பாண்டியர் கால படை வீடுகளான சீலப்பாடி, படியூர், முள்ளிப்பாடி, தாமரைப்பாடி என பல படை வீடுகள் இருந்துள்ளது.

மேலும் ஊர்களின் காவல் தெய்வமாக பிடாரியம்மன் இருந்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளை ஆய்வு செய்யும்போது சிற்பம் மண்ணில் புதைந்து இருந்தது. தற்போது இப்பகுதி மக்கள் சிற்பத்தை எடுத்து வழிபட்டு வருகின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us