நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி, : திண்டுக்கல்லில் இருந்து கம்பம் சென்ற அரசு பஸ்சை தேனி மாவட்டம் அரண்மனைபுதூரை சேர்ந்த டிரைவர் ரவி ஓட்டிச் சென்றார்.
செம்பட்டி பஸ் ஸ்டாண்டில் டூவீலரில் வந்த நபர் டிரைவரை திட்டினார். இதைக் கண்டு கொள்ளாமல் டிரைவர் பஸ்சை ஓட்டினார். துரத்திச் சென்ற நபர் சித்தையன்கோட்டை விலக்கு அருகே வழிமறித்தார். டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு, செருப்பால் தாக்கிவிட்டு தப்பினார். டிரைவர் ரவி, ரோட்டில் பஸ்சை குறுக்காக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூற போராட்டத்தை கை விட்டார்.

