UPDATED : செப் 21, 2026 10:41 PM
ADDED : செப் 21, 2026 09:12 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் (செப்.,23) துவங்குகிறது.
மதுரை அழகர்கோவில் திருமாலிருஞ்சோலை கள்ளழகரிடம் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்த முடியாத பக்தர்கள் தாடிக்கொம்பில் வீற்றிருக்கும் சவுந்தரராஜ பெருமாளுக்கு செலுத்துவது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. இக்கோயிலில் ஓராண்டில் ஏற்பட்ட தோஷத்திற்கு பிராயச்சித்தமாக 365 ஆராதனைகளும், விசேஷ ஹோமங்களும் கூடிய திருபவித்ர உற்ஸவம் விமர்சையாக துவங்குகிறது. செப்.,26 வரை காலை, மாலை ஹோம பூஜைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. செப்.,26ல் சிறப்பு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்க உள்ளது.
மேலும் தினமும் ஹோம பூஜைகளுக்கு முன் வேத, திவ்ய ப்ரபந்தம், இதிகாச புராணம் ஆகியன வேத விற்பன்னர்களால் பாராயணம் செய்யப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
