ADDED : அக் 12, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: வேம்பார்பட்டி சமூகநீதி மாணவர் விடுதி, கோபால்பட்டி சமூகநீதி மாணவியர் விடுதி இரண்டு இடங்களில் பயிற்சி கலெக்டர் வினோதினி தலைமையிலான சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது இரண்டு விடுதிகளில் காப்பாளர், காப்பாளினி இருவரும் பணிபொறுப்பில் இல்லாததாலும், உயர் அலுவலர்களிடம் முறையான முன் அனுமதி இன்றி வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து கலெக்டர் சரவணன் பரிந்துரைப்படி விடுதிக் காப்பாளர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.