ADDED : ஜூன் 26, 2026 10:40 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளி விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இரு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். ஊழியர்கள் வருகை, உணவு வழங்கல் குறைபாடுகள் குறித்து மாணவர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
இப்புகார் எதிரொலியாக வார்டன் தினேஷ்குமார், சமையலர் சிவக்குமாரை மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் சுபாஷினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடக்க உள்ளது.
