தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வெயிலால் அதிகரிக்கும் கலப்பட குளிர்பான கடைகள்; பொதுமக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு

வெயிலால் அதிகரிக்கும் கலப்பட குளிர்பான கடைகள்; பொதுமக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு

வெயிலால் அதிகரிக்கும் கலப்பட குளிர்பான கடைகள்; பொதுமக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு


ADDED : பிப் 20, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை துவங்கும் முன்பே வெயில் அதிகரித்துள்ளதையொட்டி கலப்பட குளிர்பானங்கள், தரமற்ற சுத்திகரிப்பு குடிநீர் விற்பனையால் பொதுமக்களுக்கு நோய்தொற்று அபாயம் பெருகி உள்ளது.

மாவட்டத்தின் பல இடங்களில் கோடை காலத்தையொட்டி குளிர்பான கடைகள் அதிகம் முளைத்துள்ளன. குறிப்பாக பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களில் துவங்க பட்டுள்ள இந்த கடைகளில் ரூ.10 முதல் குளிர்பானங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்ச், பைன்ஆப்பிள், மேன்கோ, லெசி, லெமன், ஸ்பெஷல் சோடா என பலவிதங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த குளிர்பானங்களில் ரசாயண, வண்ண பொடிகள் கலவை உள்ளதா என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பயன்படுத்தி ஐஸ்கிரீம் விற்பனை கடைகளும் நகரும் வண்டிகளின் மூலமாக முளைத்து தெருக்களில் அங்குமிங்கும் நடமாடுவதால் குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களை சாப்பிட வைக்கும் நேரடி முயற்சியில் இறங்குகிறது.

இதுதவிர பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ரூ10க்கு பிளாஸ்டிக் பாட்டல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் பல பெயர்களில் வெளிவந்துள்ளது. இதை வாங்கி பருகுவதை வழக்கமாக கொள்ளும் பலருக்கு சரும வியாதி முதல் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தநிலையில் அலுவலகங்கள், வீடுகளில் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சுத்திகரிப்பட்ட குடிநீர் என 20லிட்டர் கேன்கள், மினி லாரிகளில் சப்ளை செய்யப்படுகின்றன. இப்படியான குடிநீரும் ருசியற்ற தன்மையில் உப்பு நீராக உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

.........

குழந்தைகளை குறிவைத்து விற்பனை

விலை மலிவாக கிடைக்கும் குளிர்பானங்களில் தரத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் வாந்தி, பேதி, வயிற்று போக்கு, காய்ச்சல் முதலிய நோய்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. உச்சி வெயில் மண்டையை பிளக்கும்போது குளிர்பானம் அருந்துதல் என்ற விதிமுறையே தவறானதாகும். முடிந்தவரை இளம் சூட்டிலும், அதிகம் குளிர்ச்சியற்ற குடிநீரிலுமாக தாகத்தை தவிர்ப்பது நலம் காக்கும். குளிர்பான விற்பனையானது குழந்தைகளை குறிவைத்து நடப்பதால் அவர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

செந்தில் குமார், தனியார் ஊழியர்,திண்டுக்கல்.

........

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us