ADDED : மார் 19, 2026 05:01 AM
பழநி: பழநி பெரிய பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.
ரம்ஜானை முன்னிட்டு பழநி பெரிய பள்ளிவாசலில் ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் ரவிமனோகரன், அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்வர்தீன், தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், த.வெ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன், சி.பி.எம்., முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் கந்தசாமி, காங்., மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம், வி.சி, தே.மு.தி.க., உட்பட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.
