நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி, : சாணார்பட்டி வல்லம்பட்டி வலசு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடக்கிறது.
மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் சூதாட்ட கிளப்பில் செங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். வெட்டுச்சீட்டு,ரம்மி என பலர் சூதாட்டம் ஆடி பணம், நகை, செல்போன் உள்ளிட்டவைகளை இழக்கின்றனர். போதை பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

