sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ... பாதிப்பு : மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க தேவை பயிற்சி

/

காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ... பாதிப்பு : மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க தேவை பயிற்சி

காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ... பாதிப்பு : மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க தேவை பயிற்சி

காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ... பாதிப்பு : மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க தேவை பயிற்சி


UPDATED : ஜன 04, 2026 05:44 AM

ADDED : ஜன 04, 2026 05:42 AM

Google News

UPDATED : ஜன 04, 2026 05:44 AM ADDED : ஜன 04, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடையும் காலங்களில் மதிப்பு கூட்டுப் பொருள் தயார் செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் காய்கறிகள் அதிகளவு உற்பத்தியாகின்றன. குறுகிய கால இப்பயிர்களை அதிகளவு சாகுபடி செய்வதை விவசாயிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபமாக காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வெகுவாக பாதிக்கின்றனர். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் உற்பத்தி செலவை கூட ஈட்ட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.ஒவ்வொரு பருவ காலங்களிலும் கூடுதல் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நிலையில் அவை மார்க்கெட்டிற்கு வரும்போது வரத்து அதிகரிப்பால் விலை படுபாதாளத்திற்கு செல்கிறது. இதனால் விலை கிடைக்காமல் நஷ்டத்தில் விற்கும் போக்கு உள்ளது.

இதை தவிர்க்க உற்பத்தி காய்கறிகளுக்கு வேளாண் விற்பனை துறை மூலம் நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும்.

உற்பத்தி குறித்து தோட்டக்கலைத்துறை அவ்வப்போது ஆலோசனை வழங்க வேண்டும். விலை வீழ்ச்சி போது காய்கறிகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு, மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயார் செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் விலை வீழ்ச்சி காலங்களில் மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்றி விலை வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பம்அதிகரிக்கும்.

நடவடிக்கை எடுக்கலாமே


விலை வீழ்ச்சி போது காய்கறிகளின் தன்மைக்கேற்ப மதிப்பு கூட்டு பொருள் தயார் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும். பருவ காலத்தில் பயிர்களின் பரப்பு குறித்து அறிவுறுத்தல் செய்ய வேண்டும். காய்கறி பயிர்களின் விலை நிலவரத்தை கிராம விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் சமூக வலைதளம் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும். இதை அறிவிக்கும் போது பாதிக்காமல் இருக்க வழி ஏற்படும். வேண்டும்.

விவேகானந்தன்,விவசாயி, மன்னவனுார்.






      Dinamalar
      Follow us