/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்திரப்பதிவு பணிகளில் பாதிப்பு
/
பத்திரப்பதிவு பணிகளில் பாதிப்பு
ADDED : மார் 16, 2024 06:36 AM
வடமதுரை : வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்று, பத்திர நகல் பெற முடியாத நிலையில் இருப்பதால் 2 வாரங்களாக பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடமதுரையில் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலகம் மூலம் சாணார்பட்டி, திண்டுக்கல், வேடசந்துார், வடமதுரை என 4 ஒன்றிய பகுதிகளை சேர்ந்தகிராம மக்கள் தங்களின் நிலங்கள் தொடர்பான பணிகளை செய்து கொள்ள வேண்டும். போதிய பணியாளர்கள் இல்லாததால் ஆண்டுகணக்கில் மேனுவல் வில்லங்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகபல மாதங்களாக பிரச்னை உள்ளது.பிப்.29 முதல் வில்லங்கம், நகல் பெறாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள்சென்னை சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்னை என்கின்றனர்.
இதனால் 2 வாரங்களாக புதிதாக சொத்துக்களை விற்க, வாங்கமுடியாமல் நாள்தோறும் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. விரைவில் பிரச்னையை சரிசெய்யநடவடிக்கை எடுக்க வேண்டும்.

