/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் பதவியேற்பு
/
மாற்றுத்திறனாளிகள் பதவியேற்பு
ADDED : நவ 27, 2025 05:48 AM
நத்தம்: நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட அவசரக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் விஜயநாத்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், தலைமை எழுத்தர் பிரசாத் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி வரவேற்றார்.
மாற்றுத்திறனாளி சர்புதீன் தலைவர் மற்றும் செயல் அலுவலர் முன்னிலையில் நியமன உறுப்பினராக பதவியேற்றார். தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி கலந்து கொண்டனர்.
வடமதுரை : வடமதுரை பேரூராட்சியில் சரவணக்குமார், அய்யலுார் பேரூராட்சியில் நீலமேகம், எரியோடு பேரூராட்சியில் முருகன் ஆகிய மாற்றுதிறானாளிகள் கவுன்சிலர்களாக பதவியேற்று கொண்டனர்.

