/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தல் வாக்குறுதிபடி வழங்கிய ஊக்கத்தொகை... நிறுத்தம்; ஏமாற்றிவிட்டதாக பால் உற்பத்தியாளர்கள் குமுறல்

ADDED : ஏப் 23, 2025 04:00 AM

சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றால் கூட்டுறவு பால் சொசைட்டிகளில் பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் நான்கு ஆண்டுகளாக லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையை சொன்னபடி வழங்கி வந்தனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் 2024 நவம்பர் முதல் ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் , விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர்.
தற்போது மாடுகளுக்கான தட்டை ரூ.1500 , மாட்டு தீவனம் ஒரு மூடை (60 கிலோ) ரூ. 1700 க்கு விற்கும் நிலையில் பால் விலையை உயர்த்தி வழங்காததால் மாடுகளை பராமரிப்பதே சிரமமாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி படி கொடுத்த ஊக்கத் தொகையையும் நிறுத்தி விட்டால் என்ன செய்வது என குமுறுகின்றனர்.