UPDATED : ஜூன் 20, 2026 03:58 PM
ADDED : ஜூன் 20, 2026 03:40 PM
சின்னாளபட்டி:பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (பி.எப்.,) சார்பில் தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. டெல்லி விஞ்ஞான பவனில் பிரதமர் மோடி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் நடந்த விழாவிற்கு பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் பி.எம்., கிசான் திட்டம் போன்று சேம நிதிக்கான ஊக்கத்தொகை திட்டமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது'' என்றார்.
தொழில் நிறுவன சுகாதார பாதுகாப்பு இயக்கக இணை இயக்குனர் புகழேந்தி, மண்டல ஆணையர் விகாஷ் ஆனந்த், அமலாக்க அதிகாரிகள் கண்ணதாசன், ராகவன், ராஜ்கண்ணு முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர் ஆதர்ஷ் கைமதியா நன்றி கூறினார்.
