ADDED : நவ 23, 2025 03:15 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மேகமூட்டமாக மழைக்கு திரண்டிருந்த மேகங்கள் காலை 11:00 மணி அளவில் சாரம் மழையாக பெய்தது. இதன்பின் கருமேகங்கள் கலைந்து சுட்டெரிக்கும் வெயில் அடித்தது.மதியத்துக்கு பின் மீண்டும் மழை பெய்தது.
நேற்று நாள் முழுவதும் மழை, வெயில் என மாறி, மாறி வானிலை நிலவியது. கொடைக்கானல், பழநி, வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி, வேடசந்துார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக வேடசந்துாரில் 29 மில்லிமீட்டர் மழை பெய்தது.
திண்டுக்கல் 12, காமாட்சிபுரம் 17, நத்தம் 10,நிலக்கோட்டை 28.20, சத்திரபட்டி 12.40, புகையிலை நிலையம் 28.60, பழநி 9, ரோஸ் கார்டன் 8.30 பிரையண்ட் பூங்கா 9.36 மி.மீ., மழை பதிவானது.
பழநியில் நேற்று மாலை மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழநி சுற்றுப்பகுதியில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெய்க்காரப்பட்டியில் கொழுமம் சாலையில் சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ரோட்டில் ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

