/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தொடர் மழை முடங்கியது இயல்பு வாழ்க்கை
/
திண்டுக்கல்லில் தொடர் மழை முடங்கியது இயல்பு வாழ்க்கை
திண்டுக்கல்லில் தொடர் மழை முடங்கியது இயல்பு வாழ்க்கை
திண்டுக்கல்லில் தொடர் மழை முடங்கியது இயல்பு வாழ்க்கை
ADDED : ஜன 14, 2026 06:36 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டு துவக்கம் முதலே பனி' வாட்டி வதைக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மழையும், காலை 11:00 மணி வரை குளிரும் நீடித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்ய துவங்கிய மழை ஓயாமல் நேற்று முழுவதும் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் திருச்சி ரோடு, ஏ.எம்.சி., சாலை, ஜி.டி.என்.,சாலை, மெங்கில்ஸ் ரோடு, காட்டஸ்பத்திரி ரோடு, மார்கெட் சாலை, கார்ப்பரேஷன் சாலை, தமிழ்சாலை, பூ மார்கெட், ரவுண்ட் ரோடு, நாகல்நகர், பழநி, மதுரை சாலை, கரூர், பாலகிருஷ்ணாபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. வேலைக்கு செல்வோர், நடைபாதை வியாபாரிகள், கட்டட தொழிலாளர்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்கை மழையால் முடங்கியது. மழையால் குளிரும் நீடிப்பதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிப்பினை சந்திக்கின்றனர்.

