/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் நகைக்கடை அதிபர் வீடு, கடையில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

ADDED : ஜன 04, 2025 11:05 PM
திண்டுக்கல்:வரி ஏய்ப்பு செய்ததாக திண்டுக்கல் நகைக்கடை அதிபர் வீடு, கடை உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தினர். நகை கடையிலிருந்து எடை மிஷின், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ், அவரது தம்பி திரேஜ். இவர்களுக்கு சொந்தமாக திண்டுக்கல் ஆர்.எஸ். ரோடு, மேற்கு ரதவீதி, ஒட்டன்சத்திரத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக 3 நகை கடைகள் உள்ளன. இக்கடைகள், 2 வீடுகளில் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணி முதல் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு செய்ததாககூறி சோதனை நடந்தது. நேற்றும் 2வது நாளாக சோதனை நீடித்தது. ஆர்.எஸ்.ரோட்டில் உள்ள நகைக்கடையிலிருந்து நகை எடை போடும் மிஷின், உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள ஒரு வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அரை மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடத்தினர்.