sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திண்டுக்கல்

/

 அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பிடத்தால் தொற்று

/

 அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பிடத்தால் தொற்று

 அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பிடத்தால் தொற்று

 அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பிடத்தால் தொற்று


ADDED : பிப் 20, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமாகும் மரங்கள்

திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை ரோட்டில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் .மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது .

மணிமாறன், திண்டுக்கல்.

குப்பையால் பாதிப்பு

பழநி சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர் ரோட்டில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது .

கார்த்தி, பழநி.

சேதமாகும் சுத்திகரிப்பு நிலையம்

சாணார்பட்டி ஒன்றியம் வீர சின்னம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.7.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது .இது பல நாட்களாக சேதமடைந்துபயன்பாடின்றி உள்ளது .

தனபாலன், வீர சின்னம்பட்டி.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்



கள்ளிமந்தையம் - கீரனுார் ரோட்டில் காவேரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் விணாகிறது .இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது . துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கி. ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

சிறுநீர் கழிப்பிடத்தால் தொற்று

திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் அருகில் சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர் . சாப்பிட வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது .இதை தடுக்க வேண்டும்.

திருப்பதி, திண்டுக்கல்.

ரோடு சேதத்தால் விபத்து

செடிபட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் சாலையோர தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. டூவீலர்களில் இரவு நேரங்களில் செல்வோரும் விபத்தில் சிக்குகின்றனர்.

வெள்ளைச்சாமி, செடிபட்டி.

கீழே சாய்ந்த சோலார் கம்பம்

ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து கரை மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் ரோட்டின் துவக்கத்தில் சோலார் மின்விளக்கு கம்பம் கீழே விழுந்து உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணி ஒட்டன்சத்திரம்.






      Dinamalar
      Follow us