UPDATED : செப் 10, 2026 09:03 PM
ADDED : செப் 10, 2026 08:51 PM
திண்டுக்கல்:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பேருக்கு புத்தாக்க பயிற்சி முகாம் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பள்ளி கூட்டரங்கில் துவங்கியது. இவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, உதவி திட்ட அலுவலர் திருப்பதி, மெட்ரிக் பள்ளி முதல்வர்பாபு முன்னிலை வகித்தனர். முகாமில் நேற்று முன்தினம் 90 முதுகலை ஆசிரியர்களும், நேற்று 90 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இன்று 80 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநில பயிற்சி திட்ட கருத்தாளர்கள் தெய்வராஜ், குப்புசாமி, ஜெயபால், முருகன் ஆகியோர் கலை, அறிவியல், மருத்துவ, பொறியியல், செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ஆட்டோமேஷன், வானியல் உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் சுதாகர் செய்திருந்தார்.
