/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய வாய்க்கால் அமைக்க வலியுறுத்தல்
/
புதிய வாய்க்கால் அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2025 12:04 AM
நிலக்கோட்டை; மைக்கேல்பாளையத்தில் நிலக்கோட்டை வடக்கு பகுதி அனைத்து கிராம மக்கள் மற்றும் ஏரோட்டி உழவர் சங்கம் சார்பாக மக்கள் விழிப்புணர்வு கூட்டம் சர்ச் பாதிரியார் வின்ஸ்டன் தலைமையில் நடந்தது.
உழவர் சங்க தலைவர் ஜான் பீட்டர் வரவேற்றார். ஆத்தூர் ராஜாவாய்க்காலில் இருந்து தாமரைகுளம், நரசிங்கபுரம், வீரசிக்கம்பட்டி, செங்குளம் கண்மாய் வழியாக புதிய கால்வாய் அமைத்தல், மருதாநதி அணையிலிருந்து செங்கட்டாம்பட்டி கண்மாய் வழியாக நிலக்கோட்டைக்கு தண்ணீர் கொண்டு வருதல், திண்டுக்கல் குடிநீர் தேவைக்காக கொண்டு சென்ற பைப் லைன் வழியாக 5 ஊராட்சிகள் பயன்பெறும் விதமாக கண்மாய்களை நிரப்புதல், இது தொடர்பாக அக்.10ல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.