தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்

 நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்

 நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்


ADDED : மார் 15, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: நெல் அறுவடை பணிகள் துவங்கிய நிலையில் பழநி சுற்றிய பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழநி சுற்றிய பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை பெறுகின்றனர்.

ஏற்கனவே போதிய மழை இல்லாததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை ஆட்கள் பற்றாக்குறை, இயந்திர பயன்பாட்டில் வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இது விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் விலை மிகவும் குறைவாக கிடைக்கிறது.

ஜோதி மட்டை, உமா மட்டை நெல் ரகங்கள் 150 கிலோ மூடை ரூ.3000 முதல் ரூ.3600 வரை விற்கப்படுகிறது.

இவை ரூ.4000 முதல் ரூ.4500 வரை விற்கப்பட்டால் அதிக நஷ்டம் ஏற்படாது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து உரிய விலைக்கு நெல் கொள்முதல் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us