/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொது தேர்வுகளுக்காக அறிவுசார் மையம் காங்., எம்.பி., ஜோதிமணி தகவல்
/
பொது தேர்வுகளுக்காக அறிவுசார் மையம் காங்., எம்.பி., ஜோதிமணி தகவல்
பொது தேர்வுகளுக்காக அறிவுசார் மையம் காங்., எம்.பி., ஜோதிமணி தகவல்
பொது தேர்வுகளுக்காக அறிவுசார் மையம் காங்., எம்.பி., ஜோதிமணி தகவல்
ADDED : ஏப் 11, 2025 05:27 AM
வேடசந்தூர்: ''ஒன்றியம் வாரியாக நுாலகங்களுடன் இணைந்து பொது தேர்வுகளுக்கான அறிவு சார் மையம் துவக்கப்பட உள்ளதாக,'' கரூர் காங்.,எம்.பி., ஜோதிமணி கூறினார்.
வேடசந்துாரில் அவர் கூறியதாவது : ஒன்றியம் வாரியாக நுாலகங்களுடன் இணைந்து பொது தேர்வுகளுக்கான அறிவு சார் மையம் துவக்கப்பட உள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு அடுத்தபடியாக அரசு மருத்துவமனை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். தொகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஸ்மார்ட் கிளாஸ் ஆக மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து துவக்க நடுநிலைப் பள்ளிகளும் விரைவில் மாற்றப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள
வக்பு சட்ட திருத்தம் சட்டத்திற்கு புறம்பான ஒன்று. கவர்னருக்கு எதிரான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் சாசனத்தை மதிக்கும் கவர்னராக இருந்தால் ராஜினாமா செய்திருக்க வேண்டும், என்றார்.