தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிகள் இடையே ‛லீக் கிரிக்கெட்

 பள்ளிகள் இடையே ‛லீக் கிரிக்கெட்

 பள்ளிகள் இடையே ‛லீக் கிரிக்கெட்


ADDED : பிப் 11, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் - சி.எஸ்.கே., சார்பில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகளின் காலிறுதிப் போட்டி ஆர்.வி.எஸ்., ஸ்ரீவி. கல்லுாரி மைதானங்களில் நடந்தது.

ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி 26 ஓவர்களில் 50 ரன்கள் (எம்.கோகுல் 3 விக்கெட்கள், எஸ்.பி.,கோபிநாத் பாண்டி 4 விக்கெட்கள்) எடுத்து, ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் கம்பைன்டு ஸ்கூல்ஸ் அணி 6.3 ஓவர்களில் 51/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., பள்ளி அணி 29.2 ஓவர்களில் 101 ரன்கள் ( பி.நித்தரசன் 49, ஹெச்.கீர்த்திவாசன் 4 விக்கெட்கள், எஸ்.பி.,தாஸ்வின் 3 விக்கெட்கள்) எடுத்து, ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா - ஏ அணி 20.1 ஓவர்களில் 102/2 ரன்கள் (ஏ.கே.சச்சின் 28, எஸ்.எம்.நாட்ராயதருண் 31, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் அனுகிரஹா சர்வதேச பள்ளி அணி 24.4 ஓவர்களில் 70 ரன்கள் (எம்.சஞ்சித் 3 விக்கெட்கள்) எடுத்து, ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 10.2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வேடசந்துார் கம்பைன்டு ஸ்கூல்ஸ் அணி 30 ஓவர்களில் 136/9 ரன்கள் (கே.கோபிநாத் 25, எம்.விசாகன் 45, கே.அண்ணாத்துரை 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 23.2 ஓவர்களில்107 ரன்கள் எடுத்து, ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us