ADDED : அக் 11, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் 11வது சர்வதேச காபி தின விழா நடந்தது.
ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார் வரவேற்றார். காபி விரிவாக்க துணை இயக்குனர் தங்கராஜா, காபி வாரிய முன்னாள் உறுப்பினர்கள் சேகர் நாகராஜன், ரவிச்சந்திரன், இளநிலை தொடர்பு அலுவலர் ஸ்ரீதர் பேசினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் ஆனந்தன் தலைமை வகித்தார். டாக்டர் அபிநயா, உதவி விரிவாக்க அலுவலர் மாதவராஜ் பேசினர். உதவி விரிவாக்க அலுவலர் சித்ரா கலா நன்றி கூறினார்.