ADDED : ஏப் 27, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத்துறை சார்பாக சர்வதேச மாநாடு நடந்தது. கல்லுாரி முதல்வர் ஆமீனா பானு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மலேசிய ஆசிய பசுபிக் பல்கலை விரிவுரையாளர் கவிதா அருணாச்சலம், திருச்சி ஐ.ஐ.எம்., பேராசிரியர் டாக்டர் கஜானந்த்,சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லுாரி பேராசிரியர் செண்பகநாதன், பெங்களூரு ராமையா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் மோகனா பேசினர்.
மேலாண்மை துறைத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
210 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறந்த கட்டுரைக்கு பரிசு ,சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஞான பிரகாசம் நன்றி கூறினார்.

