ADDED : செப் 06, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஆத்துார் கூட்டுறவு கலை அறிவியல் கல்லுாரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். இலங்கை கூட்டுறவு வங்கித் துறையைச் சேர்ந்த கிரின்தா ஹேவா கலாங்ஸ்மேஜ் கித்சிரி, விஜயநாயக நிஷாந்த லக்ஷிரி, காந்திகிராம் பல்கலை கிராமிய நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் பிச்சை பங்கேற்று ‛கூட்டுறவு முயற்சிகள், பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு மாற்று வணிக மாதிரி’ என்ற தலைப்பில் பேசினர். கருத்தரங்கில் 14 இலங்கை பிரதிநிதிகள், 200 மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி, சதீஸ், மோகன செல்வி, கார்த்திகேயன் செய்திருந்தனர்.
