தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லஞ்ச வழக்கில் சிக்கிய நெடுஞ்சாலை; கோட்டப்பொறியாளர் மீது விசாரணை

 லஞ்ச வழக்கில் சிக்கிய நெடுஞ்சாலை; கோட்டப்பொறியாளர் மீது விசாரணை

 லஞ்ச வழக்கில் சிக்கிய நெடுஞ்சாலை; கோட்டப்பொறியாளர் மீது விசாரணை


ADDED : பிப் 10, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லஞ்ச வழக்கில் சிக்கிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2022ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கோட்ட பொறியாளராக பணியாற்றிய மதன்குமாரிடம் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதன்குமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அவர் மீது துறைரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உயர்அதிகாரிகள் நேற்று துறைரீதியான விசாரணை நடத்தினர். இதில் மதன்குமார் பணியாற்றிய காலகட்டத்தில் பராமரிக்கப்பட்ட பதிவேடுகள், ஆவணங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அலுவலக பணியாளர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணையும் நடத்தப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us