ADDED : டிச 14, 2025 05:15 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழக அரசால் சமுதாய நல்லிணக்கத்திற்காக கபீர்புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதிற்கு போலீசார், ஆயுதப்படை வீரர்கள், போலீசார், அரசுப்பணியாளர்கள் தவிர பிறர் விண்ணப்பிக்கலாம். கலவரம், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, விருது வழங்கப்படுகிறது.
https://awards.tn.gov.in ல் டிச.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், கலெக்டர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624004 முகவரி , 74017 03504 ல் அணுகலாம்.
