ADDED : ஜூலை 16, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன்படி 2025-ம் ஆண்டிற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம். படிவத்தை https://tinyurl.com/Panchayat award https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/Samooga_Nallinakka_Ooratchi_Award_Application.pdf ல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.