தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பி.எம்.,கிஷான் திட்ட முகாமுக்கு அழைப்பு

பி.எம்.,கிஷான் திட்ட முகாமுக்கு அழைப்பு

பி.எம்.,கிஷான் திட்ட முகாமுக்கு அழைப்பு


UPDATED : மே 15, 2026 09:36 PM

ADDED : மே 15, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 09:36 PM ADDED : மே 15, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாகேந்திரன் செய்திக்குறிப்பு:

பி.எம்.,கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சில விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யாதது, ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காதது, இ-.கே.ஒய்.சி., செய்யாதது போன்ற காரணங்களால் நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகளுக்கு இந்திய தபால்துறை வங்கி அலுவலர்கள் மூலம் புதிய கணக்கு தொடங்கி தடையின்றி நிதி உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இ-.கே.ஒய்.சி., செய்யாதவர்கள் அருகில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலம் கைரேகை அங்கீகாரம் மூலமாக உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். திட்டத்தில் இணையாத தகுதி விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us