ADDED : ஜன 15, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கு திண்டுக்கல் பா.ஜ.,சார்பில் பல்வேறு அமைப்பினருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சர்ச் பாதிரியார் செல்வராஜிற்கு அழைப்பு கொடுத்து வரவேற்றனர். பா.ஜ.,சிறுபான்மை அணி தலைவர் வேலுார் இப்ராஹிம், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், நகர தெற்கு மேற்கு தலைவர்கள் முருகேசன், செந்தில் பால்ராஜ், மாவட்ட தலைவர் சேவியர், பொதுச் செயலாளர் இன்பராஜ் பங்கேற்றனர்.