/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருநங்கையர் விருதுக்கு அழைப்பு
/
திருநங்கையர் விருதுக்கு அழைப்பு
ADDED : ஜன 09, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது.
2025 ம் ஆண்டுக்கான விருதானது ஏப்ரல் 15 ம் தேதி ரூ.1 லட்சம் காசோலை , சான்றுடன் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பிப். 10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

