/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரிடியம் மோசடி செய்தவரின் உறவினர் கடத்தல்; கைது 9
/
இரிடியம் மோசடி செய்தவரின் உறவினர் கடத்தல்; கைது 9
இரிடியம் மோசடி செய்தவரின் உறவினர் கடத்தல்; கைது 9
இரிடியம் மோசடி செய்தவரின் உறவினர் கடத்தல்; கைது 9
ADDED : நவ 28, 2025 11:24 PM
நெய்க்காரப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே இரிடியம் தருவதாக பணம் பெற்று மோசடி செய்தவரின் உறவினரை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழநி குதிரையாறு அணை பகுதியில் உள்ள தோட்டத்தில் திருப்பூர் மாவட்டம் கொழுமம் ஆத்துார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து 29, பணி புரிந்தார். இவரை சில நபர்கள் கடத்தி சென்றனர். ஐவர் மலைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரை பழநி தாலுகா போலீசார் மீட்டனர்.
தேனி மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 27, சித்தார்பட்டியை சேர்ந்த வேல்முருகன் 31, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறையை சேர்ந்த சக்திவேல் 39, ஆகியோரிடம் இரிடியம் வாங்கி தருவதாக கூறி திருப்பூர் மாவட்டம் கொழுமம் ஆத்துார் பகுதியை சேர்ந்த மணிகண்டன் 43, லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதனால் மூவரும் பணத்தை பெற மணிகண்டனின் மைத்துனரான காளிமுத்துவை கடத்தி சென்றது தெரிந்தது.
காளிமுத்துவை கடத்திய வழக்கில் இம்மூவரை தவிர தேனி மாவட்டம் போடி பொட்டல்குளம் பகுதியை சதீஷ்குமார் 38, குழலார் பட்டி பாபு 36, பெருமாள் பட்டி பரமேஸ்வரன் 27, திருச்சி மாவட்டம் மாங்கரை ராஜேஷ்குமார் 30, அரவிந்தன் 23, தஞ்சாவூர் மாவட்டம் தொண்டாம்பட்டி ராஜேஷ் 28, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

