/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருதாநதி அணை நீர் திறந்த நிலையில் பரப்பலாறு,பொருந்தலாறு நீர் திறக்கல ஏமாற்றத்தில் பாசன விவசாயிகள்

ADDED : ஜன 14, 2026 06:31 AM

திண்டுக்கல்: தமிழக அரசு நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உத்தரவை தொடர்ந்து ஆத்துார் மருதாநதி அணை நீர் முறைப்படி திறக்கப்பட்ட நிலையில் பரப்பலாறு, பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறக்காததால் விவசாயிகள் ஏமற்றமடைந்தனர்.
விவசாயம்,குடிநீர் தேவையை கருதி நேற்று (ஜன.13) முதல் 17 வரை ஐந்து நாட்களுக்கு அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இதை முறைப்படி நேற்று அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். இதில் மருதாநதி அணை செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், கோகுல கண்ணன், தி.மு.க.,வினர் பங்கேற்றனர். மருதாநதி அணை நீர் திறப்பால் இப்பகுதி விசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் ,ஒட்டன் சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து நேற்று முதல் 21 வரை, பழநி பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நேற்று முதல் பிப். 11 வரை தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுருந்தார். அரசு கூறியப்படி மருதாநதி அணையிலிருந்து தீண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட இரு அணையிலிருந்தும் தண்ணீர் திறக்காததால் இதை நம்பி உள்ள விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இது தொடர்பாக துறை அதிகாரிகள் கூறுகையில், 'முறையாக உத்தரவு வராததால் திறக்கவில்லை' என்றனர்.