/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெரிய பாடகரா இருப்பாரோ: திண்டுக்கல் சிறை போலீஸ் அசத்தல்
/
பெரிய பாடகரா இருப்பாரோ: திண்டுக்கல் சிறை போலீஸ் அசத்தல்
பெரிய பாடகரா இருப்பாரோ: திண்டுக்கல் சிறை போலீஸ் அசத்தல்
பெரிய பாடகரா இருப்பாரோ: திண்டுக்கல் சிறை போலீஸ் அசத்தல்
UPDATED : ஜன 02, 2025 05:37 PM
ADDED : ஜன 02, 2025 05:33 PM

திண்டுக்கல்;கிறிஸ்துமஸை முன்னிட்டு திண்டுக்கல் சிறையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் காரர் ஒருவர் 'அட்டகத்தி'பட பாடலை
அசத்துடலுடன் பாட அங்கிருந்தவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை சமூக
வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக ரோட்டில் மாவட்ட கிளை சிறை உள்ளது. இங்கு 200க்கு மேலான கைதிகள் உள்ளனர். இங்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு 2024 டிசம்பரில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கைதிகளை உற்சாகப்படுத்தும்
விதமாக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர்,ஒலிபெருக்கியை கையில் எடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான'அட்டகத்தி'எனும் திரைப்படத்தில் வரும் நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா... ஒரு தலையா காதலித்தால்
வெல்ல முடியுமா... என்ற பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார்.
அப்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் பாடல்
பாடிய போலீஸ்காரரை,உற்சாகப்படுத்தும் விதமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதை லட்சக்கணக்கனோர் பார்த்து சம்பந்தபட்ட போலீஸ் காரரை,பாராட்டி லைக் செய்துள்ளனர். இது பார்ப்போரை
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

