/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம் காந்திகிராம பல்கலை துணைவேந்தர் அறிவுரை

ADDED : டிச 11, 2025 05:26 AM
சின்னாளபட்டி: ''மாணவர்கள் பட்டப்படிப்புகளுடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசினார்.
காந்திகிராம பல்கலையின் தமிழ்துறை, மதுரை மறுபக்கம் ஆவணப்பட இயக்கம் சார்பில் நடந்த சர்வதேச திரைப்பட திருவிழாவில் அவர் பேசியதாவது: வரும் காலங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பினால் மட்டும் முன்னேற முடியாது.
தங்களுக்கென தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறும்படங்களும், ஆவணப் படங்களும் சமுதாய சிந்தனைகளை அனைத்து தரப்பினரிடமும் ஒன்று சேர்க்கும் பணியை மேற்கொள்கின்றன. அதற்கேற்ப இது போன்ற திரைப்பட திருவிழாக்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் வரவேற்றார்.
திரைப்பட அமைப்பின் நிறுவனர் அமுதன் ,பேராசிரியர் ஷாஜி, குறும்பட இயக்குனர் கைலாஷ் பாரதி, ஆவணப்பட இயக்குனர் அரவிந்த், எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் பேசினார்.