ADDED : ஏப் 16, 2026 02:44 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் துரைராஜ் நகரை சேர்ந்தவர் 'ஆடிட்டர்' பாலசுப்பிரமணியன். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் இவரது வீட்டில் நேற்று மாலை 4:00 மணிக்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 30 நிமிடம் இந்த சோதனை நடந்தது.
விவேகானந்த நகரை சேர்ந்த 'பைனான்சியர்' வைரவன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை நடத்தினர். ஆன்லைன் பணப்பரிமாற்றம், வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள், ரொக்கம், வரி ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
