ADDED : ஏப் 23, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
தேர்தல் பணி மேற்பார்வையாளர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் எட்டிக்குளத்துப்பட்டி, புதுப்பட்டி, பாடியூர், ம,வளவிசெட்டிபட்டி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு வழங்க தி.மு.க., நிர்வாகிகள் வைத்திருந்த 118 சேலைகள், 7 வேட்டிகள், 4 அரிசி மூடைகள், 76 பஞ்சாமிர்த டப்பாக்கள், 340 வெள்ளிக்காசுகள், 33 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
