/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் மீண்டும் கடுங்குளிர்
/
கொடைக்கானலில் மீண்டும் கடுங்குளிர்
ADDED : ஜன 19, 2026 04:37 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து வெட, வெடக்கும் குளிர் நிலவுகிறது.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் உறை பனி தாக்கத்தால் கடுங்குளிர் நடுங்க வைத்தது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சில நாட்கள் சாரல், மிதமான மழை பெய்தது. இதனால் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பனியின் தாக்கம் தணிந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதியம் 3:00 மணிக்கு பனியின் தாக்கத்தால் குளிர் நிலவுகிறது. பகலில் அதிகபட்சம் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிறது.
மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கீழ் பூமி, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை 10:00 மணி வரை பனியின் தாக்கம் நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை தாமதமாக துவங்குகிறது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் மலைப் பகுதியினர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

