/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு
/
ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு
ADDED : செப் 10, 2025 08:10 AM

திண்டுக்கல் : சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர், முருகன், ராஜாக்கிளி, ஜோசப்சேவியர், முபாரக்அலி, ஜெசி தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட்பால்ராஜ், பேட்ரிக்ரெய்மாண்ட் பேசினர்.