ADDED : ஏப் 17, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையின் பயிற்சி வேலை வாய்ப்பு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் அனிதா பயஸ் வரவேற்றார். பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்.
வேலை வாய்ப்பு அலுவலர் கிங்ஸ்லி பேசினார். பல்கலை சேவை கிராம பகுதிகளை சேர்ந்த 1200க்கு மேற்பட்டோருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
வேலைவாய்ப்பு பயிற்சி மைய இணை இயக்குனர் அருணாச்சலம் நன்றி கூறினார்.